Skip to main content

Posts

Showing posts from April, 2023

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

  வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல்  (infinity)  பலப்பல உலகங்கள்  (Universes)  வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும்  (manifest)  மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும்  (unmanifest)  இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம். இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை  constitution of India  போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன. கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப...